பக்கம்:குறள் நானூறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துலாக்கோலின் முள், முன்னர் தான் நடுவில் நின்று சமநிலையைக் காட்டும், பின்னர் தன்பால் வைக்கப்படும் பொருளை அளவிடும். அது போன்றதே நடுவுநிலை, அது சான்ருேர்க்கு அழகு தரும் ஓர் அணிகலன். 51

நடுவுநிலைமையிலிருந்து நீங்கிப் பெறும் செல்வம் தீமையைத் தான் தரும். நன்மையைத் தருவதாகப் பட்டாலும், பட்ட அப்பொழுதே அச்செல்வத்தைக் கைவிடவேண்டும். . 52

எவருக்கும் இறந்தபின் எஞ்சுவது புகழும் பழியு மாகிய இரண்டில் ஒன்றே. புகழைக்கொண்டு அவர் நடுவுநிலைமைத் த கு தி உள்ளவராக வாழ்ந்தார் என்றும், பழியைக்கொண்டு அத்தகுதியற்றவராக வீழ்ந்தார் என்றும் உலகோரால் அறியப்படும். 53

தன் DETು நடுவுநிலைமையிலிருந்தும் நீங்கித்தீமை செய்தல் கூடாது. செய்தால், இதல்ை யான் கெடு வேன்’ என்பதை அறிந்து திருந்துதல் வேண்டும். 54

வாணிகம் என்பது வாங்குவோர் . பொருளையும் தம் பொருள்போல் கவனமாகப் போற்றுதலாகும். அஃதே வாணிகர்க்கு நடுவுநிலை தவருத வாணிக நெறியாகும், - 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/34&oldid=555531" இலிருந்து மீள்விக்கப்பட்டது