பக்கம்:குறள் நானூறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்குரிய நிலையிலிருந்தும் மாருது அடங்கி வாழ் பவன் தோற்றம் எளிமையாலும் காட்சியாலும் சிறியதாகலாம். அவன் உள்ளத்தே அடங்கியுள்ள உரிதியால் அத் தோற்றம் மலையைவிட மிகப் பெறுது. x - 56

பணிந்து அ ட ங் கு த ல் எல்லார்க்கும் நன்று. அவருள்ளும் செல்வம் பெற்றவர்க்கு மேலும் அடக்க மாகிய ஒரு செல்வம் பெற்ற தகுதி அமையும். 57

ஐம்பொறிகளையும் அவற்றின் போக்கில் விடாமல் அடக்கிக் காக்க வேண்டும். அவற்றுள் எதைக் காக்கா வி ட் டா லு ம் நாவை அடக்கிக் காக்க வேண்டும். காவாது பேசிஞ்னுல் சொற் குற்றத்திற்கு ஆளாகிக் கலங்குவர். . . 58

தீய சொல்லின் பொருளால் பயன் உண்டாகாது. அந்நேரத்தில் ஏதேனும் ஒரு பயன் உண்டாலுைம், அது முடிவில் நன்மையாகாது தீமையாகிவிடும். 59

தீயில்ை சுடுவது உடற்புண். நாவின் சுடு சொல்லால் சுடுவது உள்ளப் புண். உடற்புண் வடு ஆயினும் உள்ளே ஆறும். தீச்சொல் தரும் உள்ளப் புண் ஆருத வடுவாகும். 60

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/36&oldid=555533" இலிருந்து மீள்விக்கப்பட்டது