பக்கம்:குறள் நானூறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கம் வாழ்வில் மேன்மையைத் தரும், அதல்ை ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாகப் போற்றிப் கடைப்பிடிக்கவேண்டும். 6 I

ஒழுக்கந்தவறி நடத்தலால் பழி உண்டாகும். மனவலிமையுள்ள நல்லோர் இதனை அறிவர். அறிந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தலில் இருந்து தளர்ந்து தவறமாட்டார். - - 62

ஒழுக்கமுடைய 5ುಖaf தீய சொற்களை வாய் தவறியும் சொல்லார் தீய சொல் அவரிடம் எந்த நிலையிலும் அமையாது. 63

உலகத்து நல்லவர்களோடு பொருந்தி நடக்கும் ஒழுக்கத்தை அறிதல் வேண்டும். பல கலைகளைக் கற்றிருப்பினும் இதனைக் கற்றல் வேண்டும். கல்லா தவர் அறிவற்றவர் ஆவார். 64

t பிறன் மனைவியை விரும்பி ஒழுக்கம் தவறுதல் கூடாது. தவறுபவனுக்குப் பகை தோன்றும், பாவம் உண்டாகும்; பழி நிலைக்கும், அச்சம் நடுக்கும். இவை நான்கும் அவனைவிட்டு நீங்காமல் நிலைக்கும். 65’

2台

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/38&oldid=555535" இலிருந்து மீள்விக்கப்பட்டது