பக்கம்:குறள் நானூறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைம்ை

உயிரினும் உயர்ந்தது ஒழுக்கம். ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும். 131–61

ஒழுக்கம் இழுக்கின் பழுக்கும் பழி.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்(கு) அறிந்து. I 36–62

தவறியும் தகாத சொல்லாமை. ஒழுக்கம் உடையவர்க்(கு) ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல், 139 – 6.3

சற்றும் அறிவில்லார்.

உலகத்தோ(டு) ஒட்டஒழுகல், பலகற்றும், கல்லார் அறிவிலா தார். 140 - 64

. 15. பிறன் இல் விழையாமை

நான்கு குற்றம் நீங்கா. ,

பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். 146–64

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/39&oldid=555536" இலிருந்து மீள்விக்கப்பட்டது