பக்கம்:குறள் நானூறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறர் ம ன வி ையக் காமக் கண்ணுடன் நோக்க்ாமல் ஒழுகுதல் சிறந்த ஆண்தன்மையாகும். அன்புடைய நல்லவர்க்கு அது அறன் மட்டும் அன்று ஒழுக்க நிறைவும் ஆகும். 66

அச்சுறுத்தும் கடல் நீர் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கெல்லாம் உரியவர் யார் ? யாரெனில், பிறனுக்குரிய மனைவியது தோளேத் தழுவாதவரே ஆவார். - - . 67

நிலம் தன்னை ஓர் இடத்தில் தோண்டுபவரையும் வெறுத்துத் தள்ளாது மறு இடத்தால் தாங்கிக் கொள்ளும், அது போன்று தம்மை இகழ்ந்து பேசு பவரையும் த டி ந் து வெறுக்காது பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த பண்பாகும். 68

நிறை என்பது முழு மாந்தன் தன்மை, அந்த நிறை உடைமை நீங்கக் கூடாது. நீங்காமையை விரும்பினல் பொறுமையை விடாது காத்து ஒழுக வேண்டும். . - 69 தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் பொறுமை யின்றித் துன்பம் செய்தல் கூடாது. செய்தவர்க்கு அந்த ஒரு நாளே மன இன்பம் உண்டு. பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியும்வரை புகழ் உண்டு.

.w. - 70.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/40&oldid=555537" இலிருந்து மீள்விக்கப்பட்டது