பக்கம்:குறள் நானூறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர் நேர்வதை நினைந்து பார்க்காமல் பிறன் கைப்பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பக்கூடாது, விரும்பினால், அது அழின்வயே தரும். பிறன் பொருளே விரும்பாத தன்மை என்பது ஒரு தனிப்பெருமை. அது வாழ்வில் வெற்றியைத் தரும். 76

மற்றவரை அவர் இல்லாதபோது குறைத்துப் பேசி அவர் முன்னே பொய்யாகப் புகழ்ந்து பேசி வாழ்தல் இழிவு: அதைவிடச் சாதல் அறநூல்கள் சொல்லும் வாழ்வு வளர்ச்சியைத் தரும். 77

ஒருவ்ன் கண்ணுக்கு முன்னே நின்று கண் ளுேட்டம் இல்லாமல் கண்டிப்பாகப் பேசினும் பேசுக அவன் முன்னே இல்லாத இடத்துப் பின்னர் நோ வதை நினைந்து பார்க்காத பேச்சை விடுதல் வேண்டும். - 78

கேட்பவ்ர் மகிழும்படி பேசி நண்பராக அளவிளா வும் பேச்சைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். கொள்ளாதவர், புறம் பேசிப் பிரிக்கும் பேச்சால் நெருங்கிப்பழகும் உற்ருரையும் பிரித்துவிடுவ்ர். 19

அயலாரைப் புறம்பேசுபவன் அவரது குற்றங் களைக் கூர்ந்து காண்பான். அதுபோன்றே தன் குற்றங் களையும் தானே கூர்ந்து காணவேண்டும் கண்டால், புறம்பேசான். அதனல், அ வ் ன து நிலைம்ெ உயிருக்குத் தீங்கு இல்லை. 80.

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/44&oldid=555541" இலிருந்து மீள்விக்கப்பட்டது