பக்கம்:குறள் நானூறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனில்லாத சொற்களைப் பலரும் வெறுப்பர் அதனல் பயனில்லாத சொல்லுமவன் எல்லாராலும் தாழ்வாக எள்ளி நகையாடப்படுவான். 8.

பயனில்லாதவற்றை மேலும் மேலும் மேலும் விரும்பிப் பேசுபவனே மாந்தர் இனத்தில் பிறந்த நன்மகன் என்று சொல்ல வேண்டாம். நெற்கதிருள் தோன்றிய பத்ர் போன்று மக்கள் இனத்துள் பிறந்த பதடி என்று சொல்லவேண்டும். 82

தீய செயல்கள் தீமையையே தரும். சுட்டுத் தீய்க்கும் தீயைவிடக் கடுமையான தீமையையே தரும். அதல்ை, தீக்கு அஞ்சுவதைவிடக் கடுமையாக் அஞ்சவேண்டும். 83

'யான் செல்வம் இல்லாதவன்' என்று அதைப் போக்கிக் கொள்ளத் தீய செயல்களைச் செய்யக் கூடாது. செய்வதால், அக்காலத்தில் ஏழ்மையைப் போக்கிக்கொண்ட்ாலும் பின் விளைவால் மீண்டும்

ஏழையாகவேண்டி நேரும்.

ஒருவனது நிழல் அவனை விட்டு நீங்காது. தொடர்ந்து அவனது காலடியில் தங்குவது உறுதி. அதுபோன்று தீய செயல் தன்னைச் செய்பவனை விட்டு நீங்காது. அவனிடமே வந்து அமைந்து அவன் வாழ்வைக் கெடுத்தல் உறுதி. 85

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/46&oldid=555543" இலிருந்து மீள்விக்கப்பட்டது