பக்கம்:குறள் நானூறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ன் வாழ்வு நிலையைப் போன்றே பிறரது வாழ்வு நிலைக்கும் உதவுவது ஒப்புரவு எனப்படும் அத&னச் செய்து வாழ்பவன் உயிரோட்டமான வாழ்க்கை வாழ்பவன் ஆவான். உதவி செய்து வாழர் சுவன் இறந்தவர் பட்டியலில் இணைக்கப்படுவான். 86 குடிநீரைக் கொண்டது ஊருணி, அதில் நீர் நிறைந்தால் அது ஊர் மக்களுக்கெல்லாம் பயன்படும். அதுபோன்று சிறந்த அறிவுடன் ஒப்புரவு செய்பவ னிடம் நிறையும் செல்வம் உதவி வேண்டுவோர்க்கெல் லாம் பயன்படும். 87 பயன்தரும் பழங்களைத் தரும் மரம் ஊரின் நடுவே பழுத்தால் ஊரார் உண்டு சுவைக்கப் பயன்படும். அதுபோன்று அன்புடன் ஒப்புரவு செய்பவனிடம் நிறையும் செல்வம் வறுமையாளர்க்கெல்லாம் பயன் படும். 88 வேர், தளிர் முதலிய தன் உறுப்புக்கள் எல்லாம் ம ரு ந் த கி, எளிதில் மக்களுக்குக் கிட்டும் மரம் உலகோர் பிணிய்ைத் தீர்க்கும். அதுபோன்று பேருள்ளத்துடன் ஒப்புரவு செய்பவனிடம் நிறையும் செல்வம் உலகோர் துன்பம் தீர்க்கப் பயன்படும், 89 ஒப்புரவு செய்வதால் கேடு வராது. கேடுபோல் தோன்றினும் முடிவில் நன்மையையே தரும். அதனல், அக்கேட்ன்ட ன்ன்ன விலே கொடுத்தேனும் வாங்க லாம். பொருள் இல்லாது போனல் தன்னையே விற்றுப் பொருள் பெற்றுக்கொடுத்தாவது வாங்கலாம். 90

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/48&oldid=555545" இலிருந்து மீள்விக்கப்பட்டது