பக்கம்:குறள் நானூறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழையர்க்கு ஈதல் வேண்டும். அதனல் புகழ் பெற்று வாழ்தல் வேண்டும். அந்தப் புகழ்தான் ஒரு வனது உயிர்க்கு ஊதியம், உயிர்க்குப் புகழல்லர்த் ஊதியம் வேறி ஒன்றும் இல்லை. " 96

- புகழ் வளர்வது போன்றே அதன் வளர்ச்சிக்கா: வாழ்வில் சில கேடுகளும் வளரும். அப்புகழ் நிலைப்

பதற்குச் சாக்காடும் நேரும். கேட்டையும் சாச் காட்டையும் புகழ்கருதி ஏற்பவர் வித்தகர். மற்ற எளியவர் ஏற்பது அரிது. . 97;

ஒரு செயலில் தலையிட்டு முன்வருபவர் அச் செயலில் புகழ் பெறுவதற்குரிய திறமையோடு முற் படுக. புகழுக்குரிய திறமை இல்லாதவர் ஒன்றில் தலையிடுவதைவிட வ ளாதிருத்தலே அவர்க்கும் மற்ற வர்க்கும் நன்று. . . . . 98

புகழ் பெருதவன் உடம்பு- மிக இழிவானது. குறையில்லாத விளைச்சலை வழங்கிவரும் வளமுட்ைப நிலமும் அவனைத் தாங்குவதால் உண்டாகும் தாழ் வால் விளைச்சலில் குன்றும். 99

வாழ்வில் பழிநேராமல் வாழ்பவரே உண்மை வாழ்க்கை வாழ்பவர். புகழ் பெருது வாழ்பவர் சிறந்த வாழ்வு வாழாதவர் ஆவார். - . - - 100,

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/52&oldid=555549" இலிருந்து மீள்விக்கப்பட்டது