பக்கம்:குறள் நானூறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறச்செயல் எது? எது என்றல், எவ்வுயிரையும் கொல்ல்ாத செயல் புரிதல்ே, கெர்லச் செயல், அறம் அல்லாப் பிற செயல்களே யெல்லாம் செய் ய வைக்கும். 121

உலகிலே நல்லதாக ஒன்றைக் கூற வேண்டு மால்ை, அது கொல்லாமைப்ே. அதற்கு அடுத்த நல்லது ஒன்றைக் கூறின் அது பொய் சொல்லாமையே. 122

கூத்து நடக்கும் இடத்தில் ஒவ்வொருவராக வந்து பெருங்கூட்டமாகக் கூடுவர். அதுபோன்றே, செல்வமும் சிறுகச் சிறுகச் சேர்ந்து பெருஞ்செல்வமாகும். கூத்து முடித்ததும் சிறு நேரத்தில் கூட்டம் கலந்துவிடும். அது போன்றே, பெருஞ்செல்வமும் திடீரென்று சென்று விடும். இதனே அறிந்து செல்வம் இருக்கும்போதே நல்லன செய்ய வேண்டும். . . . 123.

பகல், இரவு இரண்டும் கூடி நாள் என்று ஒரு காலத் தைக் காட்டும். அது நாள் அன்று; பாய்ந்தும் மீண்டும் அறுக்கும் வாள். அந்தவாள் உயிரை அறுக்கும் என்னும் உணர்வைப் பெற்று அன்றன்று நல்லன செய்ய வேண்டும். 124

இந்த உலகு ஒரு பெருமையை உடையது. அப் பெருமை நேற்று உயிரோடு உலவிய ஒருவன் இன்று இல்லாமற் போனன் எனப்படுவதே. எனவே, நான் என்று தள்ளாமல் நல்லன செய்யவேண்டும், 125

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/62&oldid=555559" இலிருந்து மீள்விக்கப்பட்டது