பக்கம்:குறள் நானூறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருவன் எந்த எந்தப் பொருளின் பற்றை எந்தெந்த அளவில் துறக்கின்றானே, அந்தந்தப் பொருளால் அந்த அந்த அளவில் த்ன்னைத் துன்பத்திலிருந்து நீக்கிக் கொள்வான். முடிவில் துன்பமே இல்லாதவன் ஆவான். 126

ஒவ்வொரு பொருளின்மேலும் கொள்ளும் பற்றை இறுக்ப் பற்றிக்கொண்டு பற்றைத் துறக்காதவனைத் துன்பம் இறுகப் பற்றிக்கொள்ளும், பற்றிக்கொண்டு விடாமல் துன்புறுத்தும். 127

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தன்மையில் தோற்றமளிக்கும். எத்தன்மையில் தோற்றமளித்தாலும் அந்தந்தப் பொருளின் உண்மையான உள்ளிட்டைக் கண்டு உணர்தலே மெய்யறிவாம். 128

தான் சார்ந்து கடைப்பிடிக்கத் தக்க தன்மைகளை உணர வேண்டும். சார விடாமல் கெடுக்கவேண்டியவற்றைக் கெடுத்து ஒழுக வேண்டும். ஒழுகினல், தன்னைச் சார்வதற்கு வாய்ப்பாகும் துன்பங்களும் சாரா. 1.9

கூடாதவற்றின்மேல் கொள்ளும் அவா, அவாவால் எழும் சினம், சினம் தரும் அறிவுக் கலக்கம் ஆகிய மூன்றின் பெயர்களும் நினைவிலிருந்தும் கெடவேண்டும. கெட்டால் தன்னை நோக்கும் துன்பமும் தானே கெடும், 130

忽露

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/64&oldid=970967" இலிருந்து மீள்விக்கப்பட்டது