பக்கம்:குறள் நானூறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டை ஆளும் தலைவனுக்குக் காலத் தாழ்த் தாமை, கல்வியறிவு, துணிவு ஆகிய இவை மூன்றும் நீங்காதனவாய் நிலைத்திருக்க வேண்டிய தன்மைக எாகும். 136

அரசுக்குரிய வருவாயைப் பல வழிகளில் இயற்று வதும், அவற்றை ஒன்றுகூட்டித் தொகுத்தலும், தொகுத் இவற்றைப் பாதுகாத்தலும், காத்தவற்றை மக்கள் நல னுக்கெனத் திட்டமிட்டு வகையாய்ச் செலவு செய்தலும் வல்லதே அரசின் இலக்கணம். 137

கற்கவேண்டிய நூல்களைக் கற்பாயாக! அவற்றை மனக்கசடு நீங்கும் அளவில் கற்பாயாக! கற்றபின் கற்ற கல்விக்குத் தக்க வழியில் நிலத்து நடப்பாயாக! 138

மணற்பாங்கில் அமைந்த கேணி தோண்டத் தோண்டப் புதுப் புது நீர் தோண்டிய அளவிற்கு ஏற்ப, ஊறும். அதுபோன்றே, மக்களுக்கு அறிவும் கற்கக் கற்கக் கற்கும் அளவிற்கு ஏற்பப் புதுமை புதுமையாகச் கரக்கும். 139

கற்றவன் எந்த நாட்டிற்குச் சென்ருலும் அவன் நாடு போன்றே பயன்கொள்வான், அவன் ஊர் போன்றே பழகுவான். இது கண்கூடு. இதனை அறிந் தும் கற்காமலே இறக்கும் வரை காலம் கடத்தல் ஏணுே ? 140

密&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/70&oldid=555567" இலிருந்து மீள்விக்கப்பட்டது