பக்கம்:குறள் நானூறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் தன் இருப்பிடமாகிய கடலில் பிறவற்றை வெல்லும். தன்னிடமாகிய - தன்னினும் வலிமை வாய்ந்த ஆழமான நீரைவிட்டு நீங்கினல் அதனைப் பிற எளிய விலங்கும் வெல்லும். இதை எடுத்துக்காட்டா கக் கொண்டு தன் நிலைக்குரிய தக்க இடத்தில் செய லாற்றினல் வெற்றி பெறலாம் என்பதை உணர வேண்டும். I # 6 ஒருவனைப்பற்றித் தெரிந்து தெளிவடைவதற்கு அவனது நற்குணங்களையும் ஆராய வேண்டும்; குற்றங் களையும் ஆராய வேண்டும். குணம் மிகுதியாக இருப்பின் அவனைத் தக்கவஞ்கத் தெரிந்து தெளிவடைய வேண்டும். குற்றம் மிகுதியாக இருப்பின் தகாதவன கத் தெரிந்து விடவேண்டும். I 67

ஒருவனது குன உயர்வுக்கும், குற்றத் தாழ்விற்கும் உரைகல் உண்டு. அக் கல் அவன் ஆராய்ந்து அறிவுத் தெளிவோடு செய்யும் செயலாகும். 168 தன் பணிக்கு அறியவேண்டிய அறிவை அறியாத வரை எதற்கும் தேர்ந்தெடுக்கக் கூடாது. தன் அன்புக்கு உரியவர் என்ற ஒரு பற்றுக்கோட்டாலேயே பணிக்குத் தேர்ந்தெடுத்தல் அறியாமையால் விளேயும் தீமைகளை எல்லாம் தந்துவிடும். A 69

  • ஒருவன் தகுதியை ஆராயாமல் அவனைப் பற்றித் தெளிவுகொள்ளுதல் தீராத துன்பத்தைத் தரும், ஆராய்ந்து தெளிவுகொண்ட ஒருவனிடம் பின்னர் ஐயம் கொள்ளுதலும் தீராத துன்பத்தைத் தரும், 17 :

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/82&oldid=555579" இலிருந்து மீள்விக்கப்பட்டது