பக்கம்:குறள் நானூறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருவாயைப் பெருக்கி, அதனல் நிலையான வளத்தை உண்டாக்கி , இடையில் நேரும் தடைகளே யும் ஆராய்ந்து செய்வதே தெரிந்து செயலாற்றுதல் ஆகும். இவ்வாறு ஆராய்பவனே வினையைப் பயனுள்ள வகையில் செய்யும் செயலாளன். 17 i

ஒரு செயலைச் செய்ய எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த போதும், அதனை நடைமுறைப் படுத்திச் செயலாற்றும் வகையால் பலர் தம் தெளிந்த நிலையிலிருந்தும் வேறுபட்டுப் போகின்றனர். எனவே, தெளிந்ததற் கேற்பக் க வ ன மாய் ச் செயலாற்ற வேண்டும். 172

இந்தச் செயலால், இந்தத் திறமையால், இதனை இன்னவன் நிறைவேற்றுவான் என்று ஆராயவேண்டும். ஆய்ந்தபின் அதன் முழுப்பொறுப்பையும் அவனிடமே ஒப்படைத்து விடவேண்டும். 17.3

வாழ்வின் பற்றுக்கோடாகிய செல்வம் இல்லாது ஏழையானபோதும் பழைய உறவை மதித்தலும், பெருமைப்படுத்துதலும் சுற்றத்தாரிடத்தே உள்ள அன்புப் பண்புகளாம். எனவே, செல்வம் உள்ளபோது சுற்றத்தாரைத் தழுவி வாழவேண்டும். I 74

குளம் பரந்த பரப்பை உடையதானுலும் உயர்ந்த கரையில்லாமல் நீர் நிறைய முடியாது. அதுபோன்றே, ஒருவன் செல்வ வளம் உள்ளவன் ஆலுைம், சுற்றத் தாருடன் அளவளாவிப் பழகாதுபோனுல் அவனது லாழ்க்கை நிறைவடையாது. 2 y 5

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/84&oldid=555581" இலிருந்து மீள்விக்கப்பட்டது