பக்கம்:குறள் நானூறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் என்பது ஒளி மங்காத விளக்காகும். அக் குடியிற் பிறந்தவன் சோம்பல் இல்லாமல் தன் குடி உயரப்பாடுபடவேண்டும். சோம்பல் என்னும் மாசு கவ்வுமானல் குடும்ப விளக்கு அணைந்துவிடும். 196

வாழ்வில் கெடும் தன்மைகொண்டவர் விரும்பி அணியும் அணிகலன் நான்காம், அவை, எச்செயலையும் செய்யக் காலந் தாழ்த்தல், மறதி, சோம்பல், பகல் தூக்கம் ஆகியவையாகும். I 97

உலகையே உடைமையாகக் கொண்ட திருவாள னது நெருக்கமான உறவு அமைந்த இடத்துச் சிறந்த நலன்களைப் பெறலாம். ஆளுல் சோம்பல் உடைய வன் அவரிடமிருந்து எந்த நலனையும் பெற முடியாமற் போகும். 198

தம்மால் செய்வதற்கு முடியாதது என்று எச்செய விலும் சோர்வு கொள்ளக் கூடாது, முயற்சி எச்செயலை யும் செய்வதற்கு ஏற்ற பெருந் தகுதியைத் தரும். 199

முனைந்து கொள்ளும் முயற்சி பெருமையையும் செல் வத்தையும் வளர்க்கும். முயற்சி இல்லாமை சிறுமையி லும் வறுமையிலும் கொண்டு புகுத்திவிடும். 200

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/94&oldid=555591" இலிருந்து மீள்விக்கப்பட்டது