பக்கம்:குறள் நானூறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளும் செயலுக்கேற்ற கருவியும், தக்க காலமும், செயல் திறமையும், அருமையான செயலும் மாண்பு. உடையனவாய்க் கொள்பவன் மாண்புமிகு அமைச்சன்

ஆவான். 2秒伊

அஞ்சாமை, குடிப்பெருமை, மக்சளேக் காத்தல் கற்று அறிதல், முயற்சி என்னும் ஐந்துடன் அமையின் அமைச்சனது திறன் மாண்புடையதாகும். 20 o'

அமைச்சன் எதிரிகளுக்குள் பிரிவை உண்டாக்கிப் பிரித்தலும், நண்பர் பிரியாமல் காத்துக்கொள்ளுதலும், பிரிந்து சென்று நொதுமல் ஆனவரை மீண்டும் தம் முடன் பொருத்திக்கொள்ளுதலும் ஆகிய திறன்களில் வல்லவன் ஆகவேண்டும். 2 0.8

அமைச்சன் தன் கடமைகளை ஆராய்ந்து தேர்தல் வேண்டும். தேர்ந்த கடமைகளே ஆராய்ந்து செய்தல் வேண்டும், ஆட்சிக்குரிய கருத்தை உறுதியாகச் சொல்ல வேண்டும். இவற்றில் தேர்ந்தவனே வல்லமையுள்ள அமைச்சன் ஆவான். 309

இயற்கை அறிவாம் மதி நுட்பத்தைச் செயற்கை அறிவாம் நூலறிவோடு பெற்ற அமைச்சனுக்கு முன் எதிர்நிற்பவையாக எவை உள்ளன? மாற்ருரது மிக நுட்பமான சூழ்ச்சிகளும் அவனுக்கு முன் வராமலே அழியும். - 2 I (?

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/98&oldid=555595" இலிருந்து மீள்விக்கப்பட்டது