பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 குறிஞ்சிமலர்

சந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப்பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும் பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான்.

பலவித நினைவுகளோடு மங்களேஸ்வரி அம்மாளின் காரில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மெளன மாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப்புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது கார். வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் சிமெண்டுக் கட்டிடங்களுடன் கூடிய மில் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ் நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந் தார்கள் அவர்கள். சிறிது தொலைவு வரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒரு வாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக் கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது.

மங்களேஸ்வரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங் கினாள். 'இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன், தெரியுமா?"

"தெரியாது! நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு?"

'உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்."

பூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். கார் வடக்கு ஆவணி மூலவீதியில் 'மதுரை மங்கையர் கழகம்' என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. 'வா உள்ளே போகலாம்' என்று பூரணி பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/106&oldid=555830" இலிருந்து மீள்விக்கப்பட்டது