பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 105

தொடர உள்ளே சென்றாள் மங்களேஸ்வரி அம்மாள். கட்டிட வாயிலில் வேறு சில கார்களும் வரிசையாய் நின்றன. -

உள்ளே மங்களேஸ்வரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கெளரவமும் என்ன ஆவது? பூரணி! இவர்கள் எல்லோரும் இந்த மங்கையர் கழகத்தின் நிர்வாகிகள். இவர் களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா' என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லோருக்கும் சேர்த்து ஒரு முறை கைகூப்பினாள்.

நான் சொன்னேனே, அது இந்தப் பெண்தான். காலஞ் சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாக தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்து விடலாம் என்று நினைக்கிறேன்' என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேஸ்வரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே?' என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச் சுடப் பதில் தந்தாள்: 'வயதில் என்ன இருக்கிறது? இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்களுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/107&oldid=555831" இலிருந்து மீள்விக்கப்பட்டது