பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 குறிஞ்சிமலர் ஞானம் பிறவியிலேயே வருவது; அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லா விட்டால் இல்லை என்று சொல்லி விடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற் போல் கேள்விகளை யெல்லாம் கேட்கவேண்டாம்' என்று மங்களேஸ்வரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி.

அந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக் கொண்டால் பட்டம் பெற்றவர்கள்மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூச வேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம்பூரணிக்குஅந்த வினாடியே உண்டாயிற்று.சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள்.அவள்.

மங்களேஸ்வரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறு மணியிலிருந்து எட்டுமணிவரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும் அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேஸ்வரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறவரை சாராதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக் கொண்டு நின்றது.

மாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது.

பூரணி! என்னால் முடிந்த வரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்து விட்டேன். மாதர் சங்கத்தில் எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/110&oldid=555834" இலிருந்து மீள்விக்கப்பட்டது