பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 குறிஞ்சிமலர் உணவுக்கு மூன்றே அனாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனித மானதாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம்? வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்ன பூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப், படி யேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்? அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும் போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு.

'நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள்' என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான்.

'கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அநாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?"

அந்தக் கருத்துகளைக் கேட்கக் கேட்க, அந்த முகத்தில் ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடைய கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள்.

வெளியில் போய்ப் பக்கத்துப் பால் கடையில் இன்னொரு கிளாஸ் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைத்த போது "உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/114&oldid=555838" இலிருந்து மீள்விக்கப்பட்டது