பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 குறிஞ்சிமலர் அந்தக் குழந்தை அன்று அவளைக் கண்டவுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பூரணி இந்தப் புதுமையின் காரணம் புரியாமல் தம்பி திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள்.

'இவளுக்கு ஏதோ கோபமாம். சாப்பிட மாட்டேங்கறா. முரண்டு பிடிக்கிறா' என்றான் திருநாவுக்கரசு. பூரணிக்கு அந்தக் குழந்தையின் கோபம் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. சமாதானப் படுத்திச் சாப்பிட வைப்பதற்காக அருகில் சென்றாள் பூரணி. குழந்தை வெறுப்பைக் காட்டுகிறாற்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே மங்கையர்க்கரசியின் மோவாயைத் தொட்டு முகத்தைத் திருப்பிக் கேட்டாள் பூரணி.

'உனக்கு என்னடி கோபம்?"

'நீயொன்றும் எங்கூடப் பேசவேண்டாம் போ... பூரணி யைப் பிடித்துத் தள்ளுவது போல் இரண்டு பிஞ்சுக் கைகளையும் ஆட்டினாள் குழந்தை. ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள், அழுகை பொங்கி வெடித்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது குழந்தைக்கு.

'யார் மேலே எதற்காகக் கோபம் உனக்கு?" "எல்லாம் உம் மேலேதான்' ‘'எதுக்காக? நான் உனக்கு என்ன செய்தேன்?"

பதில் இல்லை. குழந்தை பொருமியழுதாள். சொற்கள் அழுகையில் உடைந்து நைந்து கரைந்து போய் விட்டன. பூரணியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தை யைத் தழுவினாற்போல் அனைத்து எடுத்துக் கொண்டு சமைய லறைக்குப் போனாள் அவள். கை கால்களை உதைத்துக் கொண்டு அவள் அணைப்பிலிருந்து திமிர முயன்றாள் குழந்தை. இதமாகச் சொல்லி அழுகையை நிறுத்திச் சாப்பிடுவதற்குத் தட்டைப் போட்டு உட்கார்த்தினாள்.

'அண்ணன் அடித்தானா உன்னை?"

'இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/124&oldid=555848" இலிருந்து மீள்விக்கப்பட்டது