பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 குறிஞ்சிமலர்

அதனாலே தான் அவள் ரயிலேறிப் போயிட்டா. எங்க அக்கா ரொம்ப அழகு. போக மாட்டாங்க. நீங்க பொய் சொல்lங் கன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி, அடி அசடே! அழகுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டாங்க...'

'அப்புறம்?" -

"அப்புறம் ஒண்ணுமில்லே. எனக்கு அழுகை அழுகையா வந்திடுச்சி. அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து சாவி வாங்க வந்ததும் நான் அண்ணனோட வந்திட்டேன்!”

  1. * 3 *
  • * *

'ஏங்க்கா... ஒதுவார்ப் பாட்டி சொன்னாப்போலே நீ செய்வியா? எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிடுவியா?"

பூரணி கலகலவென்று நகைத்தாள். குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்தாள். 'அசடே! விளை யாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுது கொண்டு வரலாமா! நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்!' மங்கை! நீ சாப்பிடு!" என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூங்கண்களும், பூஞ்சிரிப்பும் , பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற் போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விஷயத்துக்குக் கூடப் பெரிய துக்க உணர் வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப் பரப்பெல்லாம் இட மளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும் பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம்! உணர்ச்சி நிழல்களின் பொய்ச் சாயல்கள் படியாத புனிதக் கண்ணாடியா அந்த உள்ளம்!

பூரணி அன்றிரவு தன் அருகிலேயே குழந்தை மங்கையர் கரசியைப் படுக்க வைத்துக் கொண்டு கதையெல்லாம் சொன்னாள்.

"ஏங்க்கா, காமுதான் ரயிலேறி ஊருக்குப் போனா, கமலா எதுக்காகப் போகணும்? அவளும் ஊருக்குப் போயிட்டாளே?" என்று திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல் கேட்டாள் குழந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/126&oldid=555850" இலிருந்து மீள்விக்கப்பட்டது