பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 127

நாற்பது வயதுக்கும் அதிகமாகத் தோன்றிய அவருக்குப் பேசும் போது மீசை துடித்தது. பூரணி அடக்கமாக அவருக்குப் பதில் சொன்னாள்:

'மன்னிக்க வேண்டும் அய்யா! நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லை. நீங்கள் உண்மைகளை மட்டும் என்னிடம் பேசுங்கள். பொய்களை நான் கேட்கத் தயாராயில்லை.

“எது பொய்?"

'அப்பாவின் புத்தகங்களை விற்றது பாதியும் விற்காதது பாதியுமாக வைத்துக் கொண்டு நீங்கள் திணறுவதாகச் சொல் கிறீர்களே; அது முழுப் பொய்; பல பதிப்புகள் விற்றவைகளை மறைக்கிறீர்கள். உங்கள் கணக்கும் உங்கள் பேச்சும் ஊழல். அப்பா உங்களை மன்னித்தார். நான் மன்னிக்க விரும்பவில்லை. எனக்கு வயிறு இருக்கிறது. நான் வாழவேண்டியிருக்கிறது."

'என்னைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. நான் பொல்லாதவன். போக்கிரி கேள்விப்பட்டிருப்பாய். இல்லா விட்டால் இப்போது சொல்வதிலிருந்தாவது தெரிந்துகொள். மீனாட்சி அச்சகத்துக்காரன் புத்தகம் போட்டு விற்பதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்."

'அதில் சந்தேகமென்ன? நிச்சயம் பார்க்கத்தான் போகிறீர்கள்! " இந்தக் கணிரென்ற புதுக்குரல் யாருடையது என்று திரும்பினார் அவர்.

பூரணியும் வியப்பு மலர தலை நிமிர்ந்து பார்த்தாள். ஒசைப் படாமல் வந்து கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் தான் அவருக்கு இந்த அறைகூவலை விடுத்தான். எரித்து விடுவது போல் சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்தார் அவர். திருத்திச் சரி பார்த்த அச்சுப் படிகளை (புரூஃப்கள்) பூரணியிடம் காண்பிப்பதற்காகக் கொண்டு வந்திருந்தான் அவன்.

'ஓகோ நீயா...?" அவர் உறுமினார். அவனைத் தெரியும் அந்த மனிதருக்கு.

"வாழ்வில் அறம் வேண்டும், ஒழுக்கம் வேண்டும், பண்பும் நியாயமும் வேண்டுமென்று பேராசிரியர் அழகிய சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/129&oldid=555853" இலிருந்து மீள்விக்கப்பட்டது