பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 131 பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத் தானே சித்திரம் எழுத வேண்டும்? உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம்? 'மாட்டவே மாட்டேன். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழிக்கப் பார்த்தான். கண்டித்துச் சொல்லிக் கையோடு கூட்டிக் கொண்டு போய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரியவேண்டாமோ மனிதனுக்கு?"

அரவிந்தன் அவருக்குப் பின்னால் ஸ்வெட்டரும் போர்வை யும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். அரவிந்தன் மேல்தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம்? எவ்வளவு உரிமை? என்றெண்ணி வியந்தாள் பூரணி.

இது நடந்து பத்துப் பனிரெண்டு நாட்களுக்குப் பின் பஸ் நிலையத்துக்கு வடப்புறம் மேற்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். 'என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும் தானா இருக்கும்? வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்!' - என்று நினைவை மாற்றிக்கொள்ள முயன்றாள். 'இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது' என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மெளனமாகச் சிரித்தான், ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை.

'இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளை யாகவே இருக்கப் போகிறீர்கள்? தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவாதான தருமம் செய்யலாம்?" - * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/133&oldid=555857" இலிருந்து மீள்விக்கப்பட்டது