பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 34 குறிஞ்சிமலர் வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா' என்று சொல்லி அந்த அம்மாளின் அழைப்பை மறுத்து விட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளைகளில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான்.

இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டே உலாவப் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாள மாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள் வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்தபோது இம்மாதிரிப் பேர் செதுக்கும் கல் தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான்.

'பேர் செதுக்கணுமா ஐயா பேர்'

அரவிந்தன் பூரணியின் முகத்தை பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டனா நாணயத்தை எடுத்து அந்தக் கல் தச்சனிடம் கொடுத்தாள்.

"பேர்களைச் சொல்லுங்க அம்மா!'

பூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத் தாளை எடுத்து அரவிந்தன் பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற் போல் எழுதி நாணத் தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு, இரண்டனாவுக்கும் நாலு அனாவுக்கும், பேரம் பேசுகிற ஆட்களைத் தான் அந்தக் கல் தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும் அல்லது இவர்களின் இணைப்பும், அழகும், பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/136&oldid=555860" இலிருந்து மீள்விக்கப்பட்டது