பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி | 4 |

காரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்த போது அந்த அம்மா 'வா' என்று கூடச் சொல்லாதது, ஒரு மாதிரிப் பட்டது . பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, "உட்கார்' என்றுகூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள்.

'இந்தா இந்தக் கழகத்தில் இது வரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில் தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக் குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை."

சொல்லி விட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது; "கடவுளே! நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒருபோதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத் தான் ஆகவேண்டும்' என்று குமுறினாள் அவள்.

11

மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்புபாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.

- பாரதிதாசன் மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டு விட்டால் கைகூசாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில் தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக்கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/143&oldid=555867" இலிருந்து மீள்விக்கப்பட்டது