பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 குறிஞ்சிமலர் செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டை யும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவு கள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான்! ஆனால் அவளை வேலைக்கு வைத்துக்கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே? அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும், பொல்லாததை யுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்றே தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப் போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.

'இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய்? இது கெளரவமான வர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும், பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர் களுக்கு முன்மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லா விட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா?"

பூரணிக்குக் கண்களில் நீர் மல்கி விட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்: 'உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப்பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/144&oldid=555868" இலிருந்து மீள்விக்கப்பட்டது