பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 56 குறிஞ்சிமலர் வற்றுக்கு ஆர்டர் செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கம்பெனிக்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச்சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் மாலை உன்னைக் கோவிலில் சந்தித்ததாகச் சொன்னானே? அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கூறினார் மீனாட்சி சுந்தரம்.

பூரண் கேட்டாள். "என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்?" 'வருகிற நாள்தான்! அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை' என்று மறுமொழி கூறினார் அவர் அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத் தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன் மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை ஊற்றுக்கண் திறந்தது.

'இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக் கிறாயே அம்மா! உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள்? நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பிவைக்கட்டுமா? பணமோ, வேறுவகை உதவிகளோ, எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல், கேளம்மா, நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்' என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சி சுந்தரம்.

'அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசிய மானால் சொல்கிறேன். அவர் ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்று மில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்' என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச் சொல்லி தானே வலுவில் வேண்டிக் கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/158&oldid=555882" இலிருந்து மீள்விக்கப்பட்டது