பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 157 நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப்பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சின் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள்.

மறுநாள் காலை எழுந்திருந்த போது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பது போல் தோன்றியது; அன்று காலை மங்களேஸ்வரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்த போது காரியதரிசியம்மாளையும் அழைத்துக் கொண்டு வந்திருந் தார்கள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துகளை மறந்து, பார்த்து அநுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேஸ்வரி அம்மாளுடையதாகத் தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள். -

'நானும், துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோவிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்கு சார்த்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும் பேயையோ, பூதத்தையோ பார்த்து விட்டவள் போல் பதறிக்கொண்டு எழுந்து போய்விட்டாய்! நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு? ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு, அப்படி ஒரு கடிதம் வரும் போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்' என்று காரியதரிசியம்மாள் சொல்லிய போது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரை யும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வருந்தியிருக்கிறோம் என்ற அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்த தென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேஸ்வரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/159&oldid=555883" இலிருந்து மீள்விக்கப்பட்டது