பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 163

எழுந்து விரைந்தீர்கள் இல்லையா? இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள் என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இது தான். எனக்குத் தெரியும்' என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்ட போது தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்து கொண்டது.

'இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி!" என்று அரவிந்தன் அப்போதும் சிரித்துக்கொண்டு தான் சொன்னான்.

'அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காதது போல் வேண்டு மென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்து விட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காயச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது. பேச முடியாமல் தொண்டை கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். "இந்தா நீயும் படி' என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால்தானே தடுப்பதற்கு? அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு. - -

'இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோவிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/165&oldid=555889" இலிருந்து மீள்விக்கப்பட்டது