பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி I'65

பயன்படுகிற காலம் அழிந்து விட்டதோ என்று சந்தேகமாயிருக் கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா?' என்று. குமுறலோடு பேசினான் முருகானந்தம். •.

"பூரணி முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகு தூரம்: என்றான் அரவிந்தன்,

'உணர்ச்சி வசப்பட்டாலும் நன்றாகப் பேசுகிறாரே! உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இஞைர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே? - என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள்.

'எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற் கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற் சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு' என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான்:

'அப்படிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொள்ளதே தம்பீ உன் வாயிலிருந்து தப்புப் தப்பாக வெளிப்படுகிற கருத்துகளுக்கும் நான்தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப் போகிறாள்.' பூரணி இதைக் கேட்டுக் கலகலவென நகைத்தாள். அரவிந்த னிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள் முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச் சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால் முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்தனின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது, முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே, வெறி மையமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/167&oldid=555891" இலிருந்து மீள்விக்கப்பட்டது