பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - குறிஞ்சிமலர்

"கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம்! தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுப் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கி யிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப் பட்டிருக்கிறார். சரிசெய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக்கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத் துக்கு இதைக் கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. 'காலி புரூ'பில் மட்டும் இவ்வளவு அதிகமாகப் பிழைகள் இருக்கின்றனவே? இதற்கு என்ன காரணம்?' என்று அரவிந்தனைக் கேட்டான் முருகானந்தம்.

"இந்தக் காலி புரூப் படிக்கும் போதெல்லாம் நான் நம்முடைய தமிழ்நாட்டுச் சமூக வாழ்வை நினைத்துக்கொள்வேன் முருகானந்தம். காலியில் திருந்தவேண்டிய பிழைகள் அதிக மாயிருக்கும், நம்முடைய சமுதாய வாழ்விலும் இன்றைக்குத் திருத்தம் பெறவேண்டிய தவறுகள் மிகுதி...' என்று முருகானந்தத்தின் கேள்விக்கு ஆழமான ஒப்பு நோக்கோடு மறுமொழி சொன்னான் அரவிந்தன். *

"உண்மை! ஆனால் இதைப் பேனாவினால் திருத்த முடியாது, அரவிந்தன். ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாரதி பாடினானே அப்படியொரு யுகப்புரட்சி ஏற்பட்டால்தான் விடியும். இன்றைக்குள்ள நம்முடைய சமுதாய வாழ்வில் எந்த அறநூல் மருத்துவராலும் இன்னதென்று கண்டுபிடித்துக் கூறமுடியாத எல்லா நோய்களிலும் சிறிது சிறிதாக இணைந்த ஏதோ ஒரு பெரிய நோய் இருக்கிறது. தீய வழியால் ஆக்கம் பெறுவோரைக் கண்டும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெறுதலைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்கிறார்கள். சூடு சொரணையற்று போயிருக்கிறார்கள்..." என்று முருகானந்தம் சொற்பொழிவில் இறங்கிவிட்டபோது, அரவிந்தன் குறுக்கிட்டு வேலையை நினைவு படுத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/174&oldid=555897" இலிருந்து மீள்விக்கப்பட்டது