பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 குறிஞ்சிமலர்

பின்புறம் அந்த இருளில் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு துரத்தமுடியாதென்று பட்டது அவனுக்கு. கதவுக்கு அப்பால் தரையில் கால் வைக்க முடியாத ஆபாசம், வந்தவன் எல்லா ஆபாசங்களுக்கும் துணிந்து தான் வந்திருக்க வேண்டும். வாசல் பக்கம் ஒடி ஒட்டலில் யாரையாவது எழுப்பித் துணைக்குக் கூட்டிக் கொண்டு சந்து வழியாகப் போய்த் தேடிப்பார்க்கலாமா என்று ஒர் எண்ணம் ஏற்பட்டது. அச்சகத்துக் கதவை அடைத்துப் பூட்டிக்கொண்டு ஒட்டலில் ஆளை எழுப்பிப் போய்த் தேடுவதற்குள் காலம் கடந்த முயற்சியாகி விடும். முருகானந்தம் வரட்டும். அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு இரவு இங்கேயே தாழ்வாரத்தில் படுக்கலாம்' என்று துரத்தும் முயற்சியைக் கை விட்டான் அவன். எவ்வளவுதான் துணிவு உள்ளவனாயிருந்தாலும் மனத்தில் இனம் புரியாத ப்யம் எழுந்தது. நடக்க இருந்ததை நினைத்துப் பார்த்தபோது உடல் நடுங்கியது. வந்தவனுடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் எவ்வளவு பேரிழப்பு ஆகியிருக்கும்? இத்தனை நாட்கள் அரும்பாடு பட்டு அச்சிட்ட நூல்களெல்லாம் அழிந்திருக்குமே.

வாயிற்புறக் கதவு தட்டப்பட்டது. விளக்குகளை அணைக் காமல் முன்புறம் வந்து கதவைத் திறந்தான் அரவிந்தன். முருகானந்தம் திரும்பியிருந்தான்.

'சுத்தக் காலிப் பையன். மங்கம்மாள் சத்திரத்துக்குப் பின் பக்கம் தெரு விளக்கினடியில் மூணு சீட்டு விளையாடப் போய் விட்டான். நீ ஒன்றும் சொல்லவில்லையே என்று தான் பேசாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். இல்லாவிட்டால் முதுகில் பலமாக நாலு அறை வைத்து இங்கே இழுத்து வந்திருப்பேன்; சிறு வயதிலேயே விடலைத்தனமாக இப்படிக் கெட்டுப் போகிற பிள்ளைகளின் தொகை ஊருக்கு ஊர் இப்போது அதிகரித்திருக் கிறது என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தன் திகைத்தான். பேராசிரியருடைய பிள்ளை இப்படி ஆவதா? என்ற வேதனை வாட்டியது. வேதனையோடு அரவிந்தன் கூறினான்: 'முருகானந்தம் சிரமத்தைப் பாராமல் மறுபடியும் ஒரு நடை போய் நான் சொன்னேனென்று அந்தப் பையனைக் கூப்பிடு. அடி உதை ஒன்றும் வேண்டாம். காலையில் திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/180&oldid=555903" இலிருந்து மீள்விக்கப்பட்டது