பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 குறிஞ்சிமலர்

கூறினாள் அந்த அம்மாள். இப்படி ஒரு நிலையில் தாயின் வேதனை தாங்க முடியாதது.

'பதற்றப்படாதீர்கள், அம்மா! பெண் வயது வந்தவள் என்கிறீர்கள். இப்படியெல்லாம் படம், விளம்பரம், போலீஸ் என்று போனால் பின்னால் பெண்ணின் வாழ்க்கை வம்புக்கு இலக்காகிவிடும். நடந்ததை நீங்களே பெரிது படுத்தின மாதிரி ஆகிவிடும். நிதானமாக யோசித்து ஒரு வழி செய்யலாம் என்றான் அரவிந்தன்.

பின்பு பூரணியைத் தனியாக உட்புறம் அழைத்துப் போய், 'உன் தம்பி சங்கதி தெரியுமோ?' என்று தொடங்கி நடந்ததை யெல்லாம் அரவிந்தன் சொன்னான். முருகானந்தத்தை அனுப்பி யிருப்பதையும் கூறினான்.

'விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக் கிறது. எனக்கு இனிமேல் இது ஒரு புதுக் கவலை என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். 'காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீஸ் லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு லாரியில் ஏறிவிட்டான்' என்று முருகானந்தம் கூறியதும் 'அது இருக்கட்டும் காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார், ! என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன். -

14

"கற்பூரப் பாத்தி கட்டிக் கத்துரி

எருப் போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி

பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும்

அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/182&oldid=555905" இலிருந்து மீள்விக்கப்பட்டது