பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 17 சொல்ல வரும் கடிதங்கள், அதுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும், ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கி விட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு. வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.

'நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும் போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற் போல் இருக்குமே அம்மா!' என்று பாலை ஊற்றிவிட்டுப் போகும்போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின. அந்த சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே கையால் தாமே பால்வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரிவரை அத்தனை பேருக்கும் அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர் , பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர் களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள். -

'அப்பா எல்லா வகையிலும் எல்லோருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமில்லை ஏழைப்பட்ட மாணவர் களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்த வரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவிபெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா, அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர். . .

ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த

கு ம - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/19&oldid=555743" இலிருந்து மீள்விக்கப்பட்டது