பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 191 வாங்கிப் பார்த்தவுடன் முருகானந்தம் வியப்பால் துள்ளினான். அவன் முகம் அகன்று மலர்ந்தது. - ベ

'அடி சக்கை இப்படியல்லவா வகையாக மாட்டிக்கொள்ள வேண்டும்' என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளியாயின.

அதைக் கேட்டு அரவிந்தன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். 'என்னடா முருகானந்தம்? இந்தப் படத்திலிருக்கிற பெண்ணை இதற்கு முன்பே உனக்குத் தெரியுமா?' - 'பெண்ணைத் தெரியாது, இந்தப் படத்தை நன்றாகத் தெரியும் இதோ பார் வேடிக்கை...' என்று சொல்லிக் கொண்டே ஒரு மணிபர்ஸை எடுத்துப் பிரித்தான். அதில் சிறிய அளவில் எடுக்கப்பட்ட வசந்தாவின் புகைப்படங்கள் இரண்டும் அவள் கையொப்பத்தோடு கூடிய கடிதம் ஒன்றும், மூன்று நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மணிபர்ஸின் மேற்பாகம் வெளியே தெரிகிறாற் போன்ற "மைக்கா உறைக்குள் ஒர் ஆண் படமும் இருந்தது. மணிபர்ஸின் சொந்தக்காரனுடைய படமாக இருக்க வேண்டும் இது. கடிதத்தைப் பிரித்து அரவிந்தனுக்குப் படித்துக் காட்டினான் முருகானந்தம்.

'அன்புடையீர் வணக்கம். உங்கள் விண்ணப்பத் தாளும் நிபந்தனைகள் அடங்கிய விவரமான கடிதமும் கிடைத்தன. புதிய முகங்களைச் சினிமாவில் அறிமுகப்படுத்த நடிப்புக் கலையை வளர்க்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். என்னுடைய ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி உடை அழகுப் போட்டிகளிலும் பலமுறை நான் பரிசு வாங்கியிருக் கிறேன். எனக்குச் சினிமாவில் நடிக்கவேண்டுமென்ற தணியாத ஆசை. என்னுடைய புகைப்படத்தைப் பார்த்து விட்டு முதல் படத்திலேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமென்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். நிபந்தனையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொகை'யை எப்போது வேண்டும்ானாலும் தருவதற்குத் தயாரா யிருக்கிறேன். நீங்கள் எப்போது இங்கே வருவதாயிருந்தாலும் வருகிற சேதியும், தங்கும் இடமும் எழுதுங்கள். கவரிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/193&oldid=555916" இலிருந்து மீள்விக்கப்பட்டது