பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 197

கவிதைகளுக்கான செழிப்புள்ள சொற்கள் ஒன்று கூடி உருவாகி வெளிவரத் துடிக்கும். கருவிலிருந்து வெளிவரத் துடிக்கும் நிறை மாதத்துக் குழந்தை போல் இந்த வேதனை அவனது மனத்தின் இரகசியம். இத்தகைய சிந்தனைச் சூழ்நிலையில் உள்ளத்தின் மலர்ச்சியையும் சேர்த்து அவன் முகத்தில் பார்க்கலாம். கையைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறாற் போல் மலர்ந்த முகத்தோடு ஒரு விவேகானந்தர் படம் பார்த்திருப்பீர்களே! அந்த முகத்தில் உங்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைத்து விடுகிற ஏதோ ஒரு களை இருக்கும். சிந்தனையில் பார்க்கும் போது அரவிந்தனின் முகத்தில் நிலவும் ஒளி இந்த வகையைச் சேர்ந்ததுதான். - -

மூழ்கிச் சிந்திக்கிறபோது உடம்பில் வேர்க்கும் அவனுக்கு. ஆனால் அந்த சிந்தனை முடிகிறபோதோ, காயரும்பாக இருந்த பிச்சிமொட்டு இறுக்கம் நெகிழ்ந்து பிச்சிப் பூவாக மலர்கின்ற போது மணக்குமே ஒர் அற்புத மணம், அது போல் மணக்கும் அவன் உள்ளம். மணத்தின் சிறப்பால் மோர்ந்து பார்க்கிறவர் களையெல்லாம் பித்துக் கொள்ளச் செய்வதனால் தான் இந்தப் பூவுக்குப் பிச்சி, பித்திகை என்று பெயர் வந்திருக்கலாமோ? என்று அரவிந்தன் நினைப்பான். இந்தப் பூ அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. இதன் மணத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் துள்ளும் அவனுக்கு. கடவுள் உலகத்தைப் படைக்கும் போதே இன்ன இன்ன துர்நாற்றங்கள் உலகத்தில் உண்டாகலாம் என்பதை அனுமானம் செய்து கொண்டுதான் உலகத்தில் மணமுள்ள பூச்செடிகளைப் படைத்தார் என்று கற்பனை செய்து அரவிந்தன் ஒர் அழகான கவிதை எழுதியிருந்தான். எப்போதோ அதை அவனுடைய நோட்டுப் புத்தகத்தில் படித்து விட்டுப் பூரணி அவனை ஒரு கேள்வி கேட்டாள்: -

'இன்னோர் அபூர்வமான அழகு உங்களுக்குத் தெரியுமா அரவிந்தன்? அப்பா தமிழ்ச் சொற்களின் ஒலி வனப்புப் பற்றி ஒர் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்த போது எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார். பூ, மலர் இந்த இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும், சொல்வதற் காக வாய்திறக்கும் போது உங்கள் உதடுகளே பூ மலர்வது போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/199&oldid=555922" இலிருந்து மீள்விக்கப்பட்டது