பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 குறிஞ்சிமலர்

'என்னடா அரவிந்தன் நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆங்கிலப்படமாக இருந்ததனால் சீக்கிரம் விட்டுவிட்டான். திரும்பிப் போகிறபோது பார்த்தால் இங்கே அச்சகத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக் கிறதே! அவ்வளவு நாழிகை உறக்கம் விழித்து என்ன செய்து கொண்டிருந்தாய் நீ?" -

மீனாட்சி சுந்தரம் உள்ளே வருகிறபோது மேற்படி கேள்வியோடு வந்தார். அவருக்கு அவன் பதில் சொல்லுவதற்குள் மேலும் அவரே தொடர்ந்தார்: "என்னதான் வேலை மலையாகக் குவித்து கிடந்தாலும் இராத் தூக்கம் விழிக்கிற பழக்கம் உதவாது. நேற்று இரவு சினிமா விட்டுப் போகும்போது இங்கே விளக்கு எரிவதைப் பார்த்தவுடனேயே காரை நிறுத்தி இறங்கி உன்னைக் கண்டித்துவிட்டுப் போக நினைத்தேன். நீ தூக்கம் விழித்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டானை வேறு துன்பப்படுத்து கிறாயே?"

"உட்காருங்கள், எல்லா விவரமும் சொல்கிறேன் என்று அவரை உட்காரச் செய்துவிட்டு எதிரே நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்றவாறே கூறலானான் அரவிந்தன். -

அவன் பாதி கூறிக்கொண்டிருக்கும் போதே வாசலில் ஐயா என்று குரல் கேட்டது. அரவிந்தன் வெளியே எட்டிப் பார்த்து தையற்கடை வேலையாள் வந்திருப்பதைக் கண்டான். முரு கானந்தம் கொடுத்துவிட்டுப் போயிருந்த சாவியை அந்த வேலை யாளிடம் அளித்து, 'முருகானந்தம் திருச்சிக்குப் போயிருக்கிறான். சாயங்காலத்துக்குள் வந்து விடலாம். வழக்கம் போல் கடையைத் திறந்து வேலையைக் கவனித்துக் கொள்ளச் சொன்னான்' என்று சொல்லி அனுப்பி வைத்தான். .

அரவிந்தன் மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றியோ, பூரணியின் தம்பியைப் பற்றியோ மீனாட்சி சுந்தரத் திடம் விவரிக்கவில்லை. அச்சகத்தின் பின்புறம் இரவில் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லிச் சுவர் எழுப்பி கதவு போட வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். அச்சகத்தின் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/202&oldid=555925" இலிருந்து மீள்விக்கப்பட்டது