பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 205 வேலையைக் கவனமாகப் பார் என்று பையனிடமும் எச்சரித்தான். சிறிது நேரம் கழித்து அச்சகத்தில் உட்புறம் சுற்றிப் பார்த்து விட்டு முன்புறத்து அறைக்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரவிந்தனைக் கேட்டார்.

'என்னப்பா இது? பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பையன் இங்கே உட்கார்ந்து தாள் மடித்து அடுக்கிக் கொண்டிருக் கிறான்! அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையா? போர்மெனிடம் கேட்டால் நீ கொண்டு வந்து உட்கார்த்தி வைத்து விட்டுப் போனதாகச் சொல்கிறான்' என்றார் அச்சக அதிபர் மீனாட்சி சுந்தரம். . . -

அரவிந்தன் அவருக்கு எல்லா விவரங்களும் சொன்னான். "அடப்பாவமே? அவருக்கு இப்படிப் பிள்ளையாவாய்த்தது?" என்று அதைக் கேட்டு அவரும் அலுத்துக் கொண்டார். அவன் தனது ஏற்பாட்டை அவரிடம் கூறி இணங்க வைத்தான்.

நடுப்பகல் பன்னிரண்டேகால் மணி சுமாருக்கு வேர்க்க விறுவிறுக்க அலைந்த கோலத்தோடு முருகானந்தம் வந்து சேர்ந்தான். அரவிந்தன் அவனைக் கேட்கும் முன் அவனே கூறலானான். 'நான் நினைத்த படி நடந்திருக்கிறது அரவிந்தன் அந்தப் பெண் வசந்தாவை ஏமாற்றி அழைத்துப் போன ஆள் திருச்சி வெயிட்டிங் ரூமில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு ஊருக்குள் யாரையோ பார்த்து விட்டு உடன் திரும்பி வருவதா கவும்; அடுத்த எக்ஸ்பிரஸில் சென்னை போகலாமென்றும் கூறிச் சென்றானாம். சென்றவன் திரும்பவே இல்லையாம். பணத்தை யும் சமார்த்தியமாகக் கேட்டு அவளிடமிருந்து முன்பே வாங்கிக் கொண்டானாம். விடியற்காலை நான்கு மணி வரை காத்துப் பார்த்து ஏமாந்தபின் கையில் மீதமிருந்த சில்லறையைத் திரட்டித் தந்தி கொடுத்த்தாம் அந்தப் பெண். பயல் நம்மிடம் மணி பர்ஸைக் கோட்டை விட்ட ஆள்தானாம். என்னிடமிருந்த போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்... ' என்று முருகானந்தம் கூறியவுடன், 'இப்போது எங்கே அவர்கள்? காரில்தானே திரும்பினர்கள்?" என்று அவனைக் கேட்டான் அரவிந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/207&oldid=555930" இலிருந்து மீள்விக்கப்பட்டது