பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 குறிஞ்சிமலர்

'பாவம்பா அந்தப் பெண் சினிமா நடிப்பு ஆசையில் முதலில் ஏமாந்து போய்விட்டது. இப்போது குமுறிக் குமுறி அழுகிறது. எல்லோரும் அந்த அம்மாள் வீட்டில் தான இருக்கிறார்கள். பூரணியக்கா தான் ஏதேதோ சமாதானம கூறி அந்தப் பெண்ணை நடந்ததெல்லாம் மறக்கச் சொல்கிறார்கள்: என்று'முருகானந்தம் கூறிய போது அரவிந்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. சந்தேகத்தை முருகானந்தத்திடமே கேட்டான்; "பணம் இரண்டாயிரம் ரூபாய் பறிபோனதைத் தவிர வேறு ஒரு வம்பும் இல்லை' என்று அவன் பதில் கூறிய பின்பே அரவிந்தனுக்கும் நிம்மதி வந்தது. பெண்களின் தூய்மை என்பது ஐசுவரியத்தைக் காட்டிலும் மகத்தானதாயிற்றே.

'பொல்லாத காலம் அப்பா இது மங்கையராகப் பிறப்பதற் குத் தவம் செய்ய வேண்டுமென்று கவிமணி பாடியிருப்பதாக நீ அடிக்கடி சொல்வாய் அரவிந்தன்! இந்தக் காலத்தில் பெண், பெண்ணாகப் பிறவாமல் இருக்கத் தவம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்ணாக இருப்பது மிகவும் அருமையான் பாதுகாப்புக்குரிய காரியமாயிருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தையல் கடைக்குப் போனான் முருகானந்தம். அவனை அனுப்பி விட்டு, அரவிந்தன் மங்களேஸ்வரி அம்மாள் வீட்டுக்குப் போனான்.

இது நடந்து பதினைந்து நாட்களுக்குப் பின் ஒருநாள் முருகானந்தத்தின் தையல் கடையில் யாருக்கோ அவசரமாக கோட்டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

'ஏய் டெய்லர் உன்னைத்தானே' என்று வாயிற்புறமிருந்து ஒரு குரல் ஆணவத்தோடு அதிகார அழைப்பு விடுத்தது. முருகானந்தம் திரும்பிப் பார்த்தான். பளிச் சென்று அவன் கண் களில் பதிந்து உறைத்தது அந்த முகம். கொதிப்பும் சினமுமாகச் சிவந்து போக இருந்த முகத்தில் செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே 'வாருங்கள் சார் உங்கள் மணிபர்ஸ் தானே? அது பத்திரமாக இருக்கிறது. முந்நூறு ரூபாயை பதினைந்து நாள் மறந்து போய் பேசாமல் இருந்து விட்டீர்களே? அடடா வாசலிலேயே நிற்கலாமா சார் உங்களைப் போன்ற வர்கள்? உள்ளே வந்து உட்காருங்கள் சார் நீங்கள் எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/208&oldid=555931" இலிருந்து மீள்விக்கப்பட்டது