பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 : - குறிஞ்சிமலர் முயன்ற அரவிந்தனையும் மீறிக் கொண்டு பாய்ந்தான் முருகானந்தம். -

“விடு அரவிந்தன் இந்த மாதிரி ஏமாற்றுக்காரப் பயல்களைச் சும்மா விடக்கூடாது. எங்கள் தையல் கடையிலே சில முரட்டுத் துணிகளைத் தைப்பதற்கு முன்னால் 56Tಾಗಿ நனைத்துக் கசக்கி உலர்த்திப் பண்படுத்தினால் தான் தையல் நன்றாக வரும். அது மாதிரி அடித்து உதைத்து அவமானப்படுத்தினால்தான் இப்படிப்பட்ட பயல்களுக்குப் புத்திவரும்' எனறு கூறிவிட்டு அந்த ஆளை நோக்கி, "ஏண்டா, சினிமாவில் நடிக்கும் ஆசை காட்டி இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக் கிறாய்? கை வண்டி இழுத்தாலும் ஒருவரை ஏமாற்றாமல் மானமாக உழைத்துப் பிழைக்கலாமேடா எப்படியடா உனக்கு இந்தப் புத்தி வந்தது?" என்று கையை ஓங்கிக் கொண்டு போனான். х .

அரவிந்தனோடு வாயிலில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து சிலரும் வந்து சமாதானம் செய்து முருகானந்தத்தின் ஆத்திரத்தை அடக்கினர். ஆளை இழுத்துக்கொண்டு ப்ோய்ப் போலீஸில் ஒப்படைத்துக் கைக்குக் காப்பு மாட்டச் செய்த பின்புதான் முருகானந்தத்தின் கோபம் தணிந்தது. கடந்த நாலைந்து ஆண்டுகளில் பல ஊர்களில் பல பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டு அந்த ஆள் இதே வகையைச் சேர்ந்த மோசடிகளைச் செய்து வந்திருப்பதாகவும், போலீஸார் தேடிக் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்ததாகவும் பல உண்மைகள் அப்போது வெளியாயின. -

இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சிக்குப் பின் பூரணி சமயம் வாய்த்த போதெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளிடம் வசந்தாவைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தாள். 'உங்கள் மூத்த பெண் பலவீனங்கள் நிறைந்தவளாயிருக்கிறாள்.அவளுடைய மனத்திண் மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெண்ணுக்கு உடல் பூஞ்சையாகவோ, வலிமையற்றதாகவோ இருப்பது இயற்கை. ஆனால் மனம் நிறைவுடையதாக இருக்க வேண்டும். இதை உணர்த்துகிறார் போலவே நம்முடைய முன்னோர்கள் பெண்ணின் மனத் தூய்மைக்கு நிறை என்று அழகாகப் பெயரிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வைப் பழக்கி விட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/210&oldid=555933" இலிருந்து மீள்விக்கப்பட்டது