பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 221

தாமரையின் இதழ்களைப் போல் அவளுடைய தன் நினைவு மெல்ல மெல்ல நழுவி உதிர்ந்து கொண்டிருந்தது. அவளுடைய இதயத்தில் அடி மூலையிலிருந்து தீனக் குரலாய் மெல்ல எழுந்த 'அம்மா என்ற அந்த ஒரே ஒரு சொல் தியேட்டரின் எல்லாத் திசைகளிலுமிருந்து பல்லாயிரம் அனுதாபக் குரல்களாக மாறி எதிரொலித்தன. உடம்பும் உள்ளமும், உணர்வெனப்பட்ட யாவும் அந்த ஒளிப் புனல் வெள்ளத்தில் கரையத் துவண்டு நெளிந்து விழும்படி நாற்காலியில் கழற்றிப் போட்ட பூமாலையைப்போல் அவள் உடல் சாய்ந்து சரிந்திருந்தது. அவள் கனவு மண்டலத்தில் இருந்தாள். - - -

'அம்மா அம்மா! நெஞ்சு தாங்க முடியாத வேதனையால் வாய் பேசத் துடிக்கும்போது, பிறக்கிற முதல் வார்த்தை அம்மா என்ற வார்த்தைதானா? துக்கத்தின் போதும் வாயில் பிறக்கிற அழைப்பு, தாயை நோக்கித் தானோ? உடம்பிலோ மனத்திலோ வலியின் வேதனையை உணர்ந்து வாய் அம்மா என்ற சொல்லை உணர்கிறதே! என்னைப் பெறுவதற்காக என் தாய் தன் வயிற்றிலும், இடுப்பிலும் வலியை உணர்ந்தபோது 'அம்மா என்று அலறி முணங்கித் துடித்து அழைத்திருப்பாள்.

மனிதர்கள் வலியின் போது பிறந்தவர்கள். வலியைப் பிறருக்கு அளித்து வலிக்காமல் பிறந்தவர்கள் பிறந்தவுடன் கேட்கும் முதல் சொல் அம்மா என்பது. இறக்கப் போகும்போது தான் அரற்றுகிற சொல்லும் இதுதான் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவரும்போது தாய் 'அம்மா என்று முனகும் வேதனைச் சொல்தான் உயிரின் செவி உணர்ந்த முதல் ஓசை உலகத்தின் கர்ப்பத்திலிருந்து உயிர்விடுபட்டுப் போகும்போது மனிதன் தன் வாயால் தான் வருகிற போது கேட்ட இதே சொல்லை மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டு போகிறானா? எப்படியானால் என்ன? 'அம்மா என்ற இந்தச் சொல்லில் அமுதம் இருக்கிறது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இந்த வார்த்தையை உருவேற்றி அடைய முடிகிறது. இது தெய்வத் திருமொழி. நினைவழிந்த அந்நிலையில் திடீரென்று தான் குழந்தையாகி விட்டது போன்று உணர்கிறாள் பூரணி. பட்டுப் பாவாடை புரள மொட்டு மலரிதழ் விரித்தாற் போல் சிரித்துக்கொண்டு சின்னஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/223&oldid=555946" இலிருந்து மீள்விக்கப்பட்டது