பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 குறிஞ்சிமலர்

'இது எல்லோருக்கும் வந்துவிடுமா? கருவிலேயே திரு அமைய வேண்டும் என்பார்கள். பழம் பிறவியிலேயே குறைவாக எஞ்சிப்போன ஞானத்தை அடைகிற மாதிரி ஒரு பசி வேண்டும். நாமும் இருக்கிறோமே, அடுப்பங்கரையிலும், புடவைக் கடை யிலும், இல்லாவிட்டால் சினிமாக் கொட்டகையிலும் திரிகிற தற்கே போது காணவில்லை.

'மீனாட்சியம்மன் கிருபையால் இந்தப் பெண்ணுக்கு ஒரு குறைவுமில்லாமல் நெடுங்காலத்துக்கு இவள் நன்றாக இருக்க வேண்டும். இப்படி எத்தனையோ குரல் அவளை வாழ்த்து கின்றன, புகழ் மாலை சூட்டுகின்றன, வியக்கின்றன.

ஒதுவார் வீட்டு வளைகாப்பில் கேட்ட வார்த்தைகள் மனத்தில் உண்டாக்கிய புண்ணை இப்போது செவியில் விழும் இப்புகழ் வார்த்தைகள் ஆற்றுகின்றனவா? தியேட்டரில் தன்னைச் சுற்றிலும் கேட்கும் உரைகள் அவள் உள்ளத்தைக் குளிர்விக் கின்றன: மெதுவாக அவளுக்கு உணர்வு வந்தது. உடலில் சிறிது தெம்பு பிறந்தது. தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றாள். தூக்கக் கிறக்கத்திலோ, கனவிலோ எழுப்பி நடத்திக்கொண்டு போகிற மாதிரி நடத்தித் தியேட்டர் வாசலில் கார் ஏறச் செய்து டாக்டர் வீட்டுக்கு அவளை அழைத்துப் போனார்கள். அரவிந்தன் பதறித் தவித்தான். டாக்டர் தைரியம் சொல்லுகிற வரை அவனுக்கும் முருகானந்தத்துக்கும் சுயநினைவே வரவில்லை. தியேட்டரிலிருந்து செல்லம் வீட்டுக்கு ஒடிப்போய்த் தகவல் கூறினாள் போலிருக்கிறது. மங்களேஸ்வரி அம்மாள் பதறிப் போய் ஓடி வந்தாள். செய்தி கேள்விப்பட்டு அச்சக உரிமை யாளர் மீனாட்சிசுந்தரமும் வந்தார். திருப்பரங்குன்றத்திலிருந்து சொற்பொழிவுக் கேட்கத் தியேட்டருக்கு வந்திருந்த சிலர் திரும்பச் சென்று ஏதோ சொல்லியிருக்கிறார்கள். பூரணி பாதி சொற்பொழிவில் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள் என்பது போல் செய்தி பரவி விட்டது. வீட்டில் இருந்த தம்பி சம்பந்தனும் மங்கையர்க்கரசியும் அதைக் கேள்விப்பட்டுப் பயந்து கதறி அழத் தொடங்கி விட்டார்கள். -

'அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்' என்று ஒதுவார்க்கிழவர் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/226&oldid=555949" இலிருந்து மீள்விக்கப்பட்டது