பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 குறிஞ்சிமலர்

"ஒரு நோயாளியோடு இன்னொரு நோயாளியையும் கூட்டி அனுப்பப் பார்க்கிறீர்களே அம்மா இது நியாயமா? " என்று முருகானந்தம் வேடிக்கையாக அந்த அம்மாளிடம் கேட்டான்.

"என்னப்பா செய்வது? அவளை மெல்ல மாற்றி வழிக்குக் கொண்டு வர முடியுமானால் அது பூரணியால் தான் முடியும் போலிருக்கிறது. பூரணியாலேயே முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது. நான் அவளை எப்படியோ வளர்த்துச் செல்லம் கொடுத்துப் பாழாக்கி விட்டேன்' என்று அவனுக்கு அந்த அம்மாள் மறுமொழி கூறினாள்.

வசந்தாவைத் தவிர ஒரு சமையல்கார அம்மாளையும். பூரணியோடு உடன் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தாள் மங்களேஸ் வரி அம்மாள். மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தாள் பூரணி.

"உனக்கில்லாத விடுமுறையா பூரணி. நீ போய் உடம்பைத் தேற்றிக் கொண்டு வா அம்மா. இப்படி வரவழைத்து விட்டுக் கொண்டு எல்லோரையும் கவலையில் ஆழ்த்தி விட்டாயே, நீ சுகமடைந்து வந்தாலே போதும் எங்களுக்கு ' என்று நேரிலேயே வந்து அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் காரியதரிசி.

'அக்கா எங்களையெல்லாம் விட்டு நீ மட்டும் போறியே' என்று புறப்படும் போது பூரணியின் காலைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் தங்கை மங்கையர்க்கரசி. தம்பி சம்பந்தன் கண்களில் நீர் மல்க நின்றான்.

“புறப்படும்போது இப்படி எல்லாம் அழக்கூடாது அம்மா! நீ ஒரு குறைவுமில்லாமல் எங்கள் வீட்டில் இருக்கலாம்' என்று மங்கையர்க்கரசியைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். அரவிந்தன், பூரணி கார் ஏறுமுன் அவளிடம் கூறலானான். 'புது இடமாயிற்றே என்று தயங்கிக் கொண்டே போகாதே. போய் நிம்மதியாக ஓய்வு கொண்டு இரு. முடிந்தால் அடுத்த மாத நடுவில் நானும் முருகானந்தமும் அங்கே வந்து பார்க்கிறோம். போய்ச் சேர்ந் ததற்குக் கடிதம் போடு. உடல் நலத்தைப் பற்றியும் அடிக்கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/230&oldid=555953" இலிருந்து மீள்விக்கப்பட்டது