பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 குறிஞ்சிமலர்

தொடர்பு அற்றதும் பட்டென்று ஒலி நிற்கிற வானொலி மாதிரி உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்தினான். சொல்ல வேண்டாமென்று இருந்ததை வாய்தவறிச் சொல்லியது போன்ற உணர்வு அவன் முகத்தில் நிலவியது. அரவிந்தன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உல்லாசமும் தடுமாற்றமும் கலந்த நூதனமானதொரு குழப்பத்தோடு தோன்றினான் முருகானந்தம். அரவிந்தனின் பார்வையைத் தன் முகத்தில் தாங்கிக் கொள்ள இயலாதவன் போல் தலையைச் சாய்த்துக் கொண்டு எங்கோ பராக்குப் பார்த்தான் அவன். மலராத பூவின் மகரந்த மணம் போல் அப்போது அவனுடைய முகத்திலும் கண் களிலும் - இதழ்களிலும் நாணமும், கூச்சமும் கலந்து நிற்பதை அரவிந்தன் கண்டான்.

'உனக்கு யாரிடமிருந்து கடிதம் வந்தது முருகானந்தம்? தனியாக உனக்கு வேறு கடிதம் எழுத இயலவில்லை என்றும், உன்னிடம் தன் வணக்கத்தைக் கூறும்படியும் உன்னுடைய பூரணியக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருக்கிறாளே அப்பா?”

இந்தக் கேள்விக்குப்பின் முருகானந்தத்தின் உல்லாசத் தடு மாற்றம் இன்னும் அதிகமாயிற்று. அரவிந்தன் விடவில்லை. மேலும் அவனைத் துளைத்தெடுத்தான்.

'என்னப்பா தம்பி, என்ன சங்கதி? முகம் ஒரு மாதிரிக் கோணிக்கொண்டு போகிறது! கடிதம் வந்திருக்கிறது என்றாய். யார் எழுதினதென்று கேட்டால் பதில் சொல்லாமல் பராக்குப் பார்க்கிறாய்?" -

'ஒன்றுமில்லை அரவிந்தன் வந்து...' “வந்தாவது போயாவது ஆண்பிள்ளையாய் இலட்சணமாய்க் கூச்சமில்லாமல் பேசு? ஐயா!'

"அந்தப் பெண் வசந்தா கோடைக்கானல் போய்ச் சேர்ந்ததும் என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தான் வாய் தவறி உன்னிடம்..."

சொல்லி விட்டாயாக்கும் பலேடா தம்பி. காதல் கதை ஆரம்பமாயிருக்கிறதா எத்தனை நாட்களாக இந்தக் கடிதம் எல்லாம் வந்து போகிறதப்பா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/238&oldid=555961" இலிருந்து மீள்விக்கப்பட்டது