பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 239

போலிருக்கிறது சார்' என்றான் அந்த இளைஞன் கண்ணிரும் கம்பலையுமாக. -:

வேகமாக நடந்து கொண்டிருந்த அரவிந்தன் நின்றான். துவண்டு ஒடிந்து விழுந்து விடுகிறாற்போல நின்ற அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தான். நாலைந்து தடவைகள் ரப்பரால் அழித்து எழுதின காகிதம் மாதிரி வாலிபம் வீறு குன்றிச் செழிப்பற்ற முகம். தொடர்ந்து பல நாட்களாகக் குளிக்காத தோற்றம். வேர்வையேறி அழுக்கடைந்த சட்டை வேட்டி, குழிந்து இமையடியில் பள்ளம் வாங்கிப் பஞ்சடைந்த கண்கள். இந்த நாட்டு ஏழமை ஏக்கங்களுக்கும், பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும் பிரதிநிதியாக வந்தவன் போல் நின்றான் அந்தப் பஞ்சை வாலிபன். தன்னைக் காண்பவரிடத்தில் இரக்கத்தை உண்டாக்கும் குழைவைத் தன் முகத்திலும் தோற்றத்திலும் கைகளிலும் காட்டினான் அவன். அரவிந்தன் கேட்டான், "உனக்கு என்ன ஊர் அப்பா?"

இராமநாதபுரம் சீமையில் வறட்சியும் பஞ்சமும், நித்திய ஆட்சி புரியும் பகுதியைச் சேர்ந்த ஓர் ஊரைச் சொன்னான் அந்த வாலிபன். -

“எதுவரை படித்திருக்கிறாய்?"

'எஸ்.எஸ்.எல்.சிவரை படித்திருக்கிறேன், சார் டைப் ரைட்டிங் தெரியும். சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன். தேற வில்லை. வேலை தேடி மதுரைக்கு வந்தேன், சார்

அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. படித்துப் பரீட்சை

எழுதிவிட்டு மனத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோடு பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து இறங்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இன்று இந்த நாட்டில் பெரிய நகரங்களின் ஆரவாரமிக்க தெருக்களில் வயிற்றுக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுடைய மானத் தைக் காப்பாற்றாத வரையில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது இந்த நாட்டில் என்று கொதித்தது அவன் உள்ளம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/241&oldid=555964" இலிருந்து மீள்விக்கப்பட்டது