பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 குறிஞ்சிமலர் கழகத்துக்கு வந்திருப்பதாகவும் அவற்றுக்குப் பூரணியைக் கலந்து கொண்டுதான் பதில் எழுத வேண்டும் என்றும் சொல்லிப் பூரணியின் கோடைக்கானல் முகவரியை அரவிந்தனிடம் கேட்டாள் அந்த அம்மாள். -

'நேரில் நீங்களே போகப் போகிறீர்களா, அம்மா என்று புத்தகங்களை அந்த அம்மாள் மூலமே அனுப்பிவிடும் குறிப்போடு கேட்டான் அவன்.

'இல்லை, கடிதம் எழுதிக் கலந்து கொள்ளத்தான் முகவரி கேட்டேன்' என்று அம்மாள் கூறிவிடவே புத்தகம் கொடுத் தனுப்புவது சாத்தியமில்லையென முகவரி மட்டும் எழுதிக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லி விட்டுப் போனாள் அந்தப் பெண்மணி.

உடல் நலமில்லாமல் ஒய்வு கொள்ளப் போன இடத்திலும் கூடப் பூரணியைக் கவலையின்றி நிம்மதியாய் இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று மனத்துக்குள் அலுத்துக் கொண்டான் அரவிந்தன். இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. மணி ஏழே முக்காலை எட்டிய சமயம், சிறிது நேரத்தில் மீனாட்சிசுந்தரம் வந்துசேர்ந்தார்.

'இப்படி உள்ளே வா அரவிந்தன்! நான் பேசவேண்டிய விஷயம் மிக அந்தரங்கமானது. உன்னுடைய உதவியில்லாமல் இந்தத் தீர்மானத்தையும், நினைவையும் நான் நிறைவேற்றிக் கொள்வதற்கில்லை. இதனால் நமது தொழிலும் செல்வாக்கும் பெருகலாம். எத்தனையோ இலாபங்களும் செளகரியங்களும் சுலபமாகக் கிடைக்க இது ஒரு வழி!' விஷயத்தை விண்டு சொல்லாமல் பூடகமாகவே பேசிக்கொண்டு போனார் அவர். 'என்ன விஷயமென்று நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும்?' என்று கேட்டுக் கொண்டே அவருடைய மேசைக்கு முன்னால் நின்றான் அரவிந்தன். o

"முதலில் நீ உட்கார்ந்து கொள்!" அரவிந்தன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/246&oldid=555969" இலிருந்து மீள்விக்கப்பட்டது