பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 257 கொடுக்கலாகாதே என்பதற்காகச் சம்மதந்தான் என்று சொல்லி வைக்க வேண்டியதாயிற்று. அவர்கள் ஏலவார் குழலியம்மன் சந்நிதிக்கு முன் நின்றார்கள்.

'இதோ இது நந்தியா வட்டைப் பூ, அது செவ்வரலிப் பூ இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை என்று சொல்லிப் பூக்களை அவனிடம் காட்டி விட்டு இலையில் வைத்து ஒரே அளவாக முடிந்து குலுக்கிப் போட்டார் அவர் எலிவால் பின்னலும் அழுக்குப் பாவாடையுமாக அம்மன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கூப்பிட்டு, 'இந்த இரண்டு பொட்டலங் களில் உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடு, பாப்பா!' என்று கூறினார் மீனாட்சி சுந்தரம். சிறுமி சிரித்துக் கொண்டே இரண்டு முடிச்சுக்களையும் பார்த்து இரண்டில் எதை எடுப்பதென்று தயங்கி நின்றாள். பின்பு குனிந்து ஒரு முடிச்சை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடி விட்டாள்.

“என்ன பூ என்று நீயே பிரித்துப் பார், அரவிந்தன்' என்று அவனுடைய கையில் அதை அப்படியே கொடுத்தார் அவர். அரவிந்தனின் உள்ளம் ஆவலும் துடிப்பும் கொண்டு தவித்தது தவிப்போடு பிரித்தான்.

வெள்ளை வெளேரென்று பச்சை இலைக்கு நடுவே நந்தியா வட்டைப் பூ சிரித்தது! நீ தோற்றுவிட்டாய் என்று சொல்வது போல் சிரித்தது! மீனாட்சி சுந்தரமும் சிரித்தார். - -

'தெய்வசித்தமும் என் பக்கம்தானப்பா இருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவே முடியும்! நீ நாளைக்குக் காலையில் கோடைக்கானல் புறப்படுகிறாய். உன்னோடு அந்த முரு கானந்தத்தையும் அழைத்துக் கொண்டு போ. இருவரும் எப்படியோ எடுத்துச் சொல்லிப் பூரணியைச் சம்மதிக்கச் செய்து விட வேண்டும். உன்னால் முடியும் நான் இன்று மாலையே உங்கள் வரவு பற்றிப் பூரணிக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து விடுகிறேன்...' என்று பெருமை பொங்கச் சொன்னார் அவர்.

கு.ம - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/259&oldid=555982" இலிருந்து மீள்விக்கப்பட்டது