பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குறிஞ்சிமலர்

நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டி கொண்டு அழுகிறேன் என்று பல முறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றிப் பூரணியிடம் சொல்லி இருக்கிறார் அவர். உலகத்தின் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக் குறைவும், ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு, பண்புக்குத் தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.

இத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.

'இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும், எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக் கூடாது.”

பூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணிர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா? உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒர் அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.

அந்தக் கடிதத்தையும், செக்கையும் வெறுப்போடு கீழே வீசி எறிந்து விட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவது போல் அப்பாவின் படம் சிரித்துக் கெண்டிருந்தது. எப்போதும் சிரிக்கிற சிரிப்புத் தான் அப்போது அப்படித் தோன்றியது.

பூரணி உள்ளே போய்ப் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் அப்பா தான் செத்து போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை! சாகாது! உங்கள் உதவிக்கு நன்றி: தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது, என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/26&oldid=555750" இலிருந்து மீள்விக்கப்பட்டது