பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 குறிஞ்சிமலர்

அரவிந்தன் மெளனமாக ஆகட்டும் என்பது போல் தலை யசைத்தான். - .

அவர்கள் இருவரும் திருவேடகத்திலிருந்து மதுரை திரும்பி வந்தனர். 'ஒரு முக்கியமான காரியமாகச் சந்தித்துப் பேசிவர அரவிந்தனை அனுப்புவதாக அன்று மாலையில் கோடைக் கானலுக்குத் தந்தி கொடுத்துவிட்டார் மீனாட்சி சுந்தரம்.

20

"ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய் தானேதும் அறியாமே என்னுள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" -

- - தேவாரம்

மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்டஸ் மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டுவரும் காற்று, உடற் சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள். பகலிலும் வெய்யில் தெரியாததுபோல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச் செல்கின்றவர்களும், படகு செலுத்த வந்தவர்களுமாக ஏரிக் கரையில் நல்ல கூட்டம். நடக்க இயலாதவர்களையும், உட்கார வைத்துக் காற்றுவாங்க அழைத்துச் செல்லும் குதிரைக்காரர்கள் தத்தம் மட்டக் குதிரைகளோடு நின்றனர்.

பூரணியும் வசந்தாவும் ஏரியில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரையில் படகில் சுற்றிவிட்டுக் கரையேறினார்கள். குளிருக்கு அடக்கமாக இருவரும் முழுநீளக் கம்பளிக்கோட்டு அணிந்திருந்தார்கள். - -

'அக்கா சிறிது நேரம் இந்தக் குதிரையில் ஏறிச் சவாரி செய்ய வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா? இரண்டு குதிரைகள் வாடகைக்குப் பேசுகிறேன்' என்று உற்சாகத் துள்ளலோடு நடந்துகொண்டே கேட்டாள் வசந்தா. அந்தப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/260&oldid=555983" இலிருந்து மீள்விக்கப்பட்டது